பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த விநோத கொடுமை: இருவர் மாயம்
தெலங்கானாவில் 3 வயது பெண் குழந்தையின் உறுப்பில் கற்களை நுழைத்ததாக புகார் எழுந்துள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்த 3 வயது சிறுமி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் மழலையர் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி சுதாவை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் இரண்டு பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதாவது சிறுமியின் உறுப்பில் கற்களை நுழைத்ததாக பெண் ஊழியர்கள் இரண்டு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்ட அறிக்கையில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள போலீசார் அந்த இரண்டு பெண்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.