பெண் வனத்துறை அதிகாரியை கட்டையால் தாக்கிய எம்எல்ஏ உறவினர் ! - வீடியோ
வனத்துறை பெண் அதிகாரியை எம்எல்ஏவின் சகோதரர் கட்டையால் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது
தெலங்கானா மாநிலத்தின் சிர்பூர் மண்டால் பகுதியில் உள்ள சரசலா கிராமத்துக்கு வனத்துறை அதிகாரியான அனிதா சென்றுள்ளார். தெலங்கானா அரசின் மரம் நடும் திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தின் சில இடங்களில் மரம் நட அனிதா சென்றதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கிராமத்தில் உள்ள சில அரசு நிலங்களையும் தேர்வு செய்துள்ளார்.
ஆனால் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி வாக்குவாதம் செய்துள்ளனர். அப்பகுதி மக்கள் எம் எல் ஏ கொனரு கோணப்பாவின் சகோதரரான கொனரு கிருஷ்ணா ராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்த கொனரு கிருஷ்ணா ராவ், வனத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே கையில் கிடைத்த மரக்கட்டைகளால் வனத்துறை அதிகாரி வனிதாவை சரமாரியாக தாக்கினர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரி தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.