laddu auctionedpt desk
இந்தியா
தெலங்கானா: ரூ.1.26 கோடிக்கு ஏலம் போன விநாயகர் லட்டு
ஐதராபாத் பந்தலகுடா விநாயகர் லட்டு ₹ 1.26 கோடிக்கு ஏலம் போன நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் - பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த விநாயகருடன் லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும்.
vinayagar laddupt desk
விநாயகர் விசர்ஜனம் செய்வதற்கு முன்பு லட்டு ஏலம் விடப்படும். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் சொசைட்டி மூலமாக பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அப்படி இந்த ஆண்டும் லட்டு ஏலம் நடைபெற்றது. இதில், ஒரு லட்டு ₹ 1.26 கோடிக்கு ஏலம் போனது. வில்லாவில் உள்ள ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து ஒன்றுகூடி அந்த லட்டுவை சொந்தமாக்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு இதே வில்லாவில் நடந்த லட்டு ஏலத்தில் ₹ 60.80 லட்சத்திற்கு லட்டு ஏலம் எடுக்கப்பட்டது.