தெலங்கானா ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா தமிழிசை?

தெலங்கானா ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா தமிழிசை?
தெலங்கானா ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா தமிழிசை?

தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநர் பதவியிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அண்மைக்காலமாக, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கும், தமிழிசைக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆண்டின் முதல் சட்டப்பேரவை தொடரில், ஆளுநர் தமிழிசையை பேச மாநில அரசு அழைக்காததும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு தமிழிசையும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் டெல்லியில் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநர் அலுவலகத்திற்கான மரபுகளை தெலங்கானா அரசு மீறி வருவதாகவும், மாநிலத்தில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும் முறையிட்டதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழிசையை கேரளா அல்லது பாஜக ஆளும் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேரள ஆளுநராக உள்ள ஆரிஃப் முகமது கானை தெலங்கானாவுக்கு மாற்றவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தெலங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது

‌‌‌.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com