தெலங்கானாவில் இதுவரை 496 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு..!

தெலங்கானாவில் இதுவரை 496 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு..!

தெலங்கானாவில் இதுவரை 496 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு..!
Published on

தெலங்கானாவில் இந்தாண்டு இதுவரை 496 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களை அதிகம் அச்சுறுத்தும் காய்ச்சல்களில் ஒன்றுதான் பன்றிக் காய்ச்சல். ‘‘எச்1 என்1’’ என்ற வைரஸ் கிருமியால் இக்காய்ச்சல் பரவுகிறது. பொதுவாக இந்தக் காய்ச்சல் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் எளிதில் பரவும் தன்மை கொண்டது. பன்றிக் காயச்சலால் பாதிக்கப்பட்டவர் இருமும்போது அருகில் உள்ளவர்களுக்கும் இந்நோய் பரவும் தன்மை உடையது.

இந்நிலையில் தெலங்கானாவில் இந்தாண்டு இதுவரை 496 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் 307 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதத்தில் இதுவரை 189 பேர் என மொத்தமாக 496 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு நோய் தடுப்பு இயக்குநரான மருத்துவர் ஷங்கர் கூறும்போது, மற்ற மாநிலங்களை விட தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தபோதிலும் கூட உயிரிழப்பு குறைவான நிலையிலேயே உள்ளது என்றார்.

மக்கள் நோய்த் தொற்று ஏற்படாதவாறு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தால் உடனே பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். தட்டவெட்ப நிலை மாறி மாறி காணப்படுதல் உள்ளிட்ட பல காரணங்களால் பன்றிக் காய்ச்சல் அதிகம் பரவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com