போலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ
தெலங்கானாவில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பெண் ஹோம் கார்டு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தெலங்கானா மாநிலம் கத்வாலில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஹாசன். இவருக்கு ஹோம் கார்டு பெண் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மசாஜ் செய்யும்போது அந்த பெண் ஹோம் கார்டு, காவலருக்கான சீருடையில் உள்ளார். மேலும் ஹாசன் கண்மூடி மயக்க நிலையில் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜய் குமார் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம், ஹைதராபாத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ஆண் ஹோம் கார்டு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவியது. இதனையடுத்து அந்த இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.