
தெலங்கானா மாநில சட்டசபைக்கு இம்மாதம் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் ஒரு பகுதியாக ஐதராபாத்தில் இருந்து கம்மம் நகருக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த வழித்தடத்தில் காவலர்கள் சோதனையை தீவிரப்படுத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆறு கார்களில் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 7.5 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக எட்டு பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 580 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள், மதுபானம், புடவை, கொலுசு, குடங்கள் ஆகியவை தெலங்கானாவில் இப்படி பறிமுதல் செய்யபட்டுள்ளன.