தெலங்கானா: கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தெலங்கானாவில் கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
suicide
suicidept desk

தெலங்கானா மாநில கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் பைஜல் அலி. இவர், ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனி மணிகண்டா ஓட்டல் அருகே தனது சர்வீஸ் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலைய போலீசார் மற்றும் அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

suicide
suicidept desk

இந்த சம்பவம் குறித்த விவரங்களை அமைச்சர் சபிதா, மேற்கு மண்டல டி.சி.பி. விசாரித்தார். கடன் வசூல் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. சம்பவம் நடந்த இடத்தில் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பைஜல் தற்கொலைக்கான முழு காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர், குடும்ப பிரச்னையால் சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com