ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யலாம் : தெலங்கானா முதல்வர் பரிந்துரை

ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யலாம் : தெலங்கானா முதல்வர் பரிந்துரை

ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யலாம் : தெலங்கானா முதல்வர் பரிந்துரை
Published on

ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு செய்ய வேண்டும் என தெலங்கானா அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் வேலைகள் மற்றும் தொழில்கள் முடங்கியுள்ளன. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னரும் தொடரலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.வல்லுநர்கள் ஊரடங்கு தொடர வாய்ப்புள்ளது எனக் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், தெலங்கானாவில் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னர் கூடுதலாக 2 வாரம் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தெலங்கானா அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக, தெலங்கனாவில் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஜூன் 3 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்ததாக தகவல்கள் வெளியானது. 

அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் அலுவலகம் சார்பில் விளக்கம் வெளியானது. அதில், தெலங்கானாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க இன்னும் முடிவு செய்யவில்லை; பரிசீலனையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com