லஞ்சம் வாங்கினால் காலணியால் அடியுங்கள்: தெலங்கானா முதலமைச்சர்
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் காலணியால் அடியுங்கள் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் நடைபெற்ற சிங்கரேனி நிலக்கரி அமைப்பின் தேர்தலில் ராஷ்டிய சமிதி கட்சி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சிங்கரேனி நிலக்கரி அமைப்பில் தொழிலாளர்கள் உடற்தகுதியின்மை சான்றிதழ் பெற ரூ.6 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகக் கூறினார். அத்துடன் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக விடுப்பு பெறுவதற்கும், வசிப்பிடங்களை மாற்றவும் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக குறிப்பிட்டார். ஆனால் இனிமேல் யாரேனும் லஞ்சம் கேட்டாலோ அல்லது கொடுத்தாலோ அவர்களை காலணியால் அடியுங்கள் என்று சந்திரசேகர்ராவ் கடுமையாக சாடினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தினாலும், தெலங்கானா மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.