தன்னை அடிக்க வாக்காளர்களுக்கு செருப்பு கொடுக்கும் வேட்பாளர்: தெலங்கானாவில் பரபரப்பு

தன்னை அடிக்க வாக்காளர்களுக்கு செருப்பு கொடுக்கும் வேட்பாளர்: தெலங்கானாவில் பரபரப்பு

தன்னை அடிக்க வாக்காளர்களுக்கு செருப்பு கொடுக்கும் வேட்பாளர்: தெலங்கானாவில் பரபரப்பு
Published on

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில், தன்னை அடிக்க வாக்காளர்களுக்கு செருப்பு கொடுக்கும் வேட்பாளர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கி உள்ளது. இதே போல் பாஜகவும் களத்தில் இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. வாக்கு சேகரிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜக்டியல் மாவட்டத்தில் உள்ள கொருட்லா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் அகுலா ஹனுமந்த் என்பவர். இவர் செய்யும் வித்தியாசமான பிரசாரம் வாக்காளர்களை ஈர்த்துள்ளது.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அவர், ஒரு ஜோடி செருப்பை வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கிறார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப் பட்டு, தங்கள் தொகுதிக்கு செய்வதாகச் சொன்ன வாக்குறுதிகளை நான் நிறைவேற்றாவிட்டால் பொது இடத்தில் வைத்து இந்த செருப்பால் அடியுங்கள் என்று கூறி வாக்கு சேகரிக்கிறார்.

அதோடு முன் தேதியிட்டு ராஜினாமா கடிதத்தையும் வைத்துள்ளார். இதைக் காண்பித்து, தான் சரியாக தொகுதியை கவனிக்கவில்லை என் றால் தன்னை நீக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்கிறது என்றும் கூறிவருகிறார். இவரது வித்தியாசமான தேர்தல் பிரசாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com