தெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்

தெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்
தெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்

தெலங்கானா மாநிலத்தில் அரசுப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. 

தெலங்கானா மாநிலத்தில் மலைப்பாதையில் பேருந்து உருண்டு விழுந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திம்மப்பேட்டையில் இருந்து சனிவார்பேட்டை என்ற இடத்துக்கு 104 பேருடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து, கொண்டக்கட்டு கிராம மலைப்பாதையில் சென்ற போது நிலைதடுமாறி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சிக்கி 8 குழந்தைகள், 25 பெண்கள் உள்பட 57 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகப்படியான ஆட்களை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் விபத்து தொடர்பாக கொண்டக்கட்டு போக்குவரத்து மண்டல அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெலங்கானா இடைக்கால முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில இடைக்கால முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 15 பேருக்கு சிறப்பு சிகிச்சையை இலவசமாக அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com