தெலங்கானா: வெடித்த பட்டாசுகள்.. கொத்தாக பறந்து வந்த தேனீக்கள்.. தெறிச்சு ஓடிய ஆளும் கட்சியினர்!

தெலங்கானாவில் வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் உள்ளிட்ட ஆளும் கட்சியினரை தேனீக்கள் விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bees attack
Bees attackpt desk

தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இந்நிலையில், பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, பிஎஸ்பி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக யாதாத்திரி புவனகிரி மாவட்டம் ஆலேருவில் ஆளும் பிஆர்எஸ் வேட்பாளரும், எம்எல்ஏவுமான கொங்கிடி சுனிதா பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

Bees attack
Bees attackpt desk

அப்போது கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெத்துள்ளனர். இதையடுத்து மரத்தில் இருந்த தேனீக்கள் கூட்டத்தில் பட்டாசு விழுந்துள்ளது. அப்போது தேனீக்கள் பறந்து சென்று அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கியது. பிரசார ரதத்தில் இருந்த எம்.எல்.ஏ. சுனிதா உஷாராகி கீழே இறங்கி காரில் அமர்ந்து கொண்டார். அங்கிருந்த மற்ற கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியையும் பெண்கள் புடைவையைக் கொண்டும் முகத்தை மூடி கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வழக்கம் போல் பிரச்சாரம் தொடர்ந்தது. தேனீக்கள் தாக்கியதில் இருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com