வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 13 வயது சிறுவன்! அதிர்ச்சியில் உறைந்த காவல் துறை!

தெலங்கானாவில் 7ஆம் வகுப்பு படித்துவரும் மாணவன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்குள் துப்புரவுப் பணி மேற்கொள்வதற்காக வழக்கம்போல காலைப் பணியாளர் வந்துள்ளார். அப்போது வங்கி கிரில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக விரைந்துவந்த வங்கி அதிகாரிகளும், காவல் துறையினரும் சிசிடிவி காட்சியை ஆராய்ந்தபோது, அதிர்ச்சியில் உறைந்தனர். இரவு நேரத்தில் வங்கியின் கிரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது 13 வயது சிறுவன் என தெரியவந்தது. வங்கிக்குள் சென்று ஆராய்ந்த அந்தச் சிறுவன், பணம் கிடைக்காததால் மீண்டும் அங்கிருந்து சென்றதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அந்தச் சிறுவனை தேடிப்பிடித்து கைது செய்தனர். இந்தக் கொள்ளை முயற்சியின் பின்னணியில் பழைய குற்றவாளிகள் இருக்கலாம் என்றும், அவர்கள் இயக்கியபடி சிறுவன் பூட்டை உடைத்திருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com