\
தெலங்கானா: கட்டுப்பாட்டை இழந்து கடையில் மோதிய கார் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

தெலங்கானா: கட்டுப்பாட்டை இழந்து கடையில் மோதிய கார் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

தெலங்கானா: கட்டுப்பாட்டை இழந்து கடையில் மோதிய கார் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
Published on

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக சென்று கடையில் மோதிய சிசிடிவி காட்சி... அதிர்ஷ்டவசமாக கடையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சைதன்யபுரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த ஏபி 9 ஏஆர் 2691 என்ற பதிவு எண் கொண்ட வேகனார் கார், கட்டுப்பாட்டை இழந்து கடையில் மோதியது.

அந்த நேரத்தில் கடை முன்பு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கு காரணமான காரின் ஓட்டுநர் வெங்கடேஷை உள்ளூர்வாசிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com