தெலங்கானாவில் தசரா பண்டிகை விழா நிகழ்ச்சியின்போது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள அலுர் கிராமத்தில் கோவில் ஒன்றில் தசரா விழா நடந்தது. இந்த விழாவைக் காண சுற்றவட்டார மக்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது அருகில் இருந்த வீடு ஒன்றின் பால்கனியில் பலர் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பாரம் தாங்காத பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பால்கனியில் கூட்டமாக நின்று வேடிக்கைப்பார்த்தவர்களும் கீழே விழுந்ததில், இருவர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.