இந்தியா
தெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை
தெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை
தெலங்கானாவில் அரசுக்கு எதிராக, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியராக்கக்கோரி ஊழியர்கள் கடந்த 5-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் எச்சரிக்கையை மீறி, பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நீடித்து வருகிறது. கம்மம் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி தீக்குளித்து உயிரிழந்த நிலையில், நரசம்பேட்ட பேருந்து நிலையில் மற்றொரு ஊழியர் தற்கொலைக்கு முயன்றார்.
அவரை அங்கிருந்த சக ஊழியர்களும், போலீஸாரும் தடுத்து நிறுத்தினர். மேலும், குல்சும்புரா பகுதியில் சுரேந்தர் கவுடு என்ற நடத்துநர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.