\
ஆண் குழந்தையை விற்க முயன்ற அம்மா கைது

ஆண் குழந்தையை விற்க முயன்ற அம்மா கைது

ஆண் குழந்தையை விற்க முயன்ற அம்மா கைது
Published on

2 மாத ஆண் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் கவிதா (21). இவரது கணவர் ராஜி. இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தையை, பத்தாயிரம் ரூபாய்க்கு குழந்தையில்லா தம்பதியினருக்கு விற்க முயற்சித்துள்ளார். இதுபற்றி ராஜு கொடுத்த புகாரின் பேரில் கவிதாவை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர். அதற்கு கவிதா, தனது கணவர் ஒரு குடிக்காரர். ஆகவே தனியாக குழந்தையை வளர்ப்பது சிரமம். வறுமை காரணமாகவே குழந்தையை விற்க முயன்றதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, கவிதா, குழந்தையை வாங்க முயன்ற அஞ்சலி, ரமேஷ் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com