பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தனது மனைவியிடம் இருந்து விவகாரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பிகார் எம்எல்ஏ சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்கள் திருமண விழாவி ல், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், அப்போதைய ஆளுநர் சத்யபால் மாலிக் உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர். திருமண விழாவுக்காக போடப்பட்ட அலங்காரங்களும் பேசப்பட்டன.
திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆன நிலையில் விவகாரத்து கோரி தேஜ் பிரதாப் யாதவ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணை யை நவம்பர் 29 தேதி பாட்னா குடும்பநல நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. மனைவிக்கும் தனக்கும் மனப் பொருத்தம் இல்லை என்று அவர் காரணம் கூறியுள்ளார்.

