தந்தையுடன் பீகாரை நோக்கி 1200 கி.மீட்டர் சைக்கிளில் பயணித்த இளம் பெண் 

தந்தையுடன் பீகாரை நோக்கி 1200 கி.மீட்டர் சைக்கிளில் பயணித்த இளம் பெண் 
தந்தையுடன் பீகாரை நோக்கி 1200 கி.மீட்டர் சைக்கிளில் பயணித்த இளம் பெண் 
 
குர்கானில் இருந்து 15 வயது இளம் பெண் ஒருவர் தனது தந்தையுடன் 1,200 கி.மீட்டர் சைக்கிளிலேயே பயணித்துள்ளார். 
 
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது நிறைவர் ஜோதி குமாரி. கடந்த மார்ச் மாதம், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்தப் பெண் தனது தந்தை மோகன் பாஸ்வானைப் பார்க்க குர்கானுக்குச் சென்றிருந்தார். இங்குதான் இவரது தந்தை ரிக்‌ஷா தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் குர்கான் போன தருணம் பார்த்து  கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்குப் போடப்பட்டது. ஆகவே ஜோதி தனது தந்தையுடன் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எந்த வேலையும் இல்லாமல் கையில் பணமும் இல்லாமல் இருந்ததுள்ளது. அதனால் தந்தையும் மகளும் பட்டினியால் தவித்துள்ளனர். இதனிடையே வீட்டு உரிமையாளர் இவர்களை வெளியேற்றப் போவதாக அச்சுறுத்தி உள்ளார். 
 
 
இந்நிலையில் மகளும் தந்தை இருவரும் டெல்லிக்கு அருகிலுள்ள குர்கானில் இருந்து, தனது சொந்த மாநிலமான பீகாருக்குத் திரும்புவதற்கு முடிவு செய்துள்ளனர்.  தொடர்ச்சியாக மொத்தம் ஏழு நாட்கள் சைக்கிளிலேயே தங்களின் பீகாரை நோக்கிப் பயணித்துள்ளார். பீகாரை அடையும் வரை கிட்டத்தட்டப் பாதி பசியுடனே பணித்துள்ளனர். இதற்கே ஜோதி குமாரி தனியாகப் பயணிக்கவில்லை. சைக்கிளில் உடன் அவரது தந்தையை வைத்துக் கொண்டு இந்தத் தூரத்தைப் பயணித்துள்ளார். ஏறக்குறையை இவர்கள் பயணித்த தூரம் 1200 கி.மீட்டர் ஆகும். எனவே இவரது  ஆற்றலால் ஈர்க்கப்பட்ட இந்திய சைக்கிள் ஓட்டுநர்களின் கூட்டமைப்பு அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்வதற்காக இவருக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளது. இது அவரது வாழ்க்கைக்குப் பெரும்  திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 
 
இது குறித்து இந்தப் பெண்ணின் தந்தை பாஸ்வான், “என்னால் சிறிது நேரம் வாங்க முடிந்தது. பூட்டுதல் நீக்கப்பட்டவுடன் என்னால் முடிந்த வேலையை மேற்கொள்வேன், பணம் சம்பாதிப்பேன், அவனுடைய அனைத்து நிலுவைத் தொகையும் செலுத்துவேன் என்று நில உரிமையாளருக்கு நான் உறுதியளித்தேன். நான் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை வாங்குவதற்காக என் மருந்துகளை நிறுத்த வேண்டியிருந்தது” எனக் கூறியுள்ளார்.
 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com