\
பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞர் கைது 

பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞர் கைது 

பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞர் கைது 
Published on

முத்தம் கொடுக்க மறுத்ததால் பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி பிங்கி (18). 12ம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த வியாழக்கிழமை தன் ஆண் நண்பருடன் பிஜாபுரி கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு அவர் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மாணவியை தேடிய குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் மாணவியை தேடி வந்த நிலையில் வனப்பகுதியில் கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றினர். 

தலையின் பின்புறம் காயம் அடைந்த நிலையில் மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் ஆண் நண்பரான ராமன் சிங் சயானை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் பிங்கியை கொலை செய்தது தான் என ராமன்சிங் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. வனப்பகுதிக்குள் பிங்கிக்கு முத்தம் கொடுக்க முயன்றதாகவும் ஆனால் அவர் மறுத்ததால் அவரை பின்னோக்கி தள்ளிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கீழே விழுந்ததில் பிங்கியின் தலைப்பகுதி கல்லில் பட்டு காயமடைந்து அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ராமன்சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com