ஒத்திவைப்புகளே வழக்குகள் தேங்க முக்கிய காரணம் - குடியரசுத்தலைவர்
வழக்கு விசாரணையை அடிக்கடி ஒத்திவைக்கும் போக்கே நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கியிருக்க முக்கிய காரணம் என
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் தலைவர் பேசினார். அப்போது வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதே
ஏராளமான வழக்குகள் தேங்க முக்கிய காரணம் என்றார். கீழமை நீதிமன்றங்களில் ஏராளமான காலியிடங்கள் உள்ளதும், நீதிமன்ற
கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளதும் வழக்குகள் தேங்க மற்ற காரணங்கள் என அவர் தெரிவித்தார்.
நாடெங்கும் 3 கோடியே 30 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளதாகவும், இதில் 2 கோடியே 84 லட்சம் வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில்
நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நீதித்துறை நடைமுறையில் கட்டமைப்பு குறைபாடுகள் களையப்பட வேண்டும் என
இதேநிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டார்.