இந்தியா
சச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் ஐடி: என்ஜினீயர் கைது!
சச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் ஐடி: என்ஜினீயர் கைது!
சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஆரம்பித்து அதில் ட்வீட் செய்துவந்த மென்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. இந்த கணக்கில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன. இதுபற்றி சச்சின் டெண்டுல்கர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது உதவியாளர் போலீசில் புகார் தெரிவித்தார். விசாரித்து வந்த போலீசார், இது தொடர்பாக மும்பை அந்தேரியில் வசித்து வந்த நிதின் சிஷோட் (39) என்ற மென்பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.