‘தலைக்கு ஆபத்து’: ஹெல்மெட்டுடன் பாடம் நடத்திய ஆசிரியர்கள்

‘தலைக்கு ஆபத்து’: ஹெல்மெட்டுடன் பாடம் நடத்திய ஆசிரியர்கள்

‘தலைக்கு ஆபத்து’: ஹெல்மெட்டுடன் பாடம் நடத்திய ஆசிரியர்கள்
Published on

தெலுங்கானாவில் பள்ளிக்கட்டிடம் பாழடைந்துள்ளதால் பாதுகாப்பு இல்லை என்று கூறி ஆசிரியர்கள் ஹெல்மெட் அணிந்து பள்ளி வகுப்புகளை நடத்தினர்.

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்கள் ஒரு நாள் முழுவதும் ஹெல்மெட்டுடனே வேலை செய்துள்ளனர். ஹெல்மெட் அணிந்து கொண்டே மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளனர். பள்ளிக்கூட கட்டடம் பாழடைந்த நிலையில் உள்ளது என்றும், இதனால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் ஆசிரியர்கள் பலமுறை அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்துள்ளனர். புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனக்கூறிய ஆசிரியர்கள், இந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்க நிதி கேட்டும் யாரும் முன்வரவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். விவரம் அறிந்து மாவட்ட கல்வி அதிகாரி அந்த பள்ளியை நேரில் பார்வையிட்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

கடந்த வாரம் பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகக் கட்டடம் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட்டுடன் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com