ஆசிரியர் வர்க்கத்திற்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி

ஆசிரியர் வர்க்கத்திற்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி

ஆசிரியர் வர்க்கத்திற்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
Published on


ஆசிரியர் வர்க்கத்திற்கு தலைவணங்குகிறேன் என ஆசிரியர் தின வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வி மேதையாவார். ஆகையால் இவரது நினைவை போற்றும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமுதாயத்தில் சிந்தனை வளர்ச்சிக்காகவும், மகிழ்ச்சியான கல்விக்காகவும் தங்களை அர்ப்பணிப்பவர்கள் ஆசிரியர்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே ஆசிரியர்கள் தினமான இன்று ஆசிரியர்கள் வர்க்கத்திற்கு தலை வணங்குவதாகவும் கூறியுள்ளார். மேலும் தலை சிறந்த ஆசிரியராகவும், தேசியவாதியாகவும் வாழ்ந்த டாக்டர்.ராதாகிருஷ்ணனுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com