\
மாணவிகளின் உடைகளை கழற்றி தண்டனை: ஆசிரியை மீது வழக்கு!

மாணவிகளின் உடைகளை கழற்றி தண்டனை: ஆசிரியை மீது வழக்கு!

மாணவிகளின் உடைகளை கழற்றி தண்டனை: ஆசிரியை மீது வழக்கு!
Published on

இங்கிலீஷ் டெஸ்டில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவிகளின் ஆடையை கழற்றி தண்டித்த ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாண்டின் ஹரித்வார் அருகே உள்ள லண்டவ்ராவில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவிகள், இங்கிலீஷ் டெஸ்டில் குறைந்த மதிப்பெண் பெற்றனர். இதனால் கோபமான  டீச்சர், வகுப்பறையில் எல்லோர் முன்பும் மாணவிகளின் மேல் சட்டையை கழற்றவைத்தார். அவமானம் அடைந்த மாணவிகள் இருவரும் தங்கள் வீட்டில் இதுபற்றி தெரிவித்து கண்ணீர்விட்டனர். 
ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியையை பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com