\
வாத்தி பண்ற வேலையா இது? மாணவர்களின் முடியை வெட்டிய ஆசிரியர் கைது!

வாத்தி பண்ற வேலையா இது? மாணவர்களின் முடியை வெட்டிய ஆசிரியர் கைது!

வாத்தி பண்ற வேலையா இது? மாணவர்களின் முடியை வெட்டிய ஆசிரியர் கைது!
Published on

சொன்னதை கேட்காத மாணவர்களின் முடியை வெட்டிய பள்ளி ஆசிரியரும் பியூனும் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, விக்ரோலியில் உள்ள தாகூர் நகரில் கேவிவி ஆங்கில வழி பள்ளி உள்ளது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் மிலிந்த் தாக்கே. ஸ்டிரிக்ட் வாத்தியாரான இவர், மாணவர்கள் அனைவரும் தலைமுடியை ஆர்மி கட்டிங் போல வெட்டிக்கொண்டு வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். தலையில் கொஞ்சமாக முடி அதிகமாக இருந்தால் கூட அவரால் தாங்க முடியாது. அப்படியும் முடிவெட்டாமல் வந்தால், அவரே கத்திரியால் முடிவெட்டும் வேலையை செய்துவந்துள்ளார். இது பல வருடங்களாக நடந்து வந்தது. 
இந்நிலையில் நேற்றும் இதே போல சில மாணவர்களின் தலைமுடியை அவரும் பியூன் கோரேவும் வெட்டிவிட்டுள்ளனர்.  அரைகுறையாக வெட்டியதால் சில மாணவர்களுக்கு கண்ணீர் முட்டியது. சிலருக்கு மண்டையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இருந்தும் வாத்தியாரை எதிர்க்க முடியாது என்பதால் அழுது கொண்டே வீட்டுக்கு வந்து தெரிவித்தனர். 
இதையடுத்து பெற்றோர்கள் சிலர், அந்த ஆசிரியர் மீதும் பியூன் மீதும் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்ததில் உண்மை என தெரியவந்ததையடுத்து உடற்கல்வி ஆசிரியரையும் பியூனையும் கைது செய்தனர். பள்ளி நிர்வாகி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com