உத்தரப் பிரதேசத்தில் மாணவர் ஒருவரை ஆசிரியர் உருட்டுக் கட்டையால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அலகாபாத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவர் செய்த தவறுக்காக அவரை ஆசிரியர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

