இந்தியா
சிறுவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் ஆசிரியர்: வீடியோ காட்சிகள்
சிறுவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் ஆசிரியர்: வீடியோ காட்சிகள்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தனியார் பள்ளி வகுப்பு ஆசிரியர் 7-வயது சிறுவனை காட்டுமிராண்டித்தனமாக அடித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருகை பதிவேட்டுக்காக ஆசிரியர் பெயர் சொல்லி அழைத்தபோது, அந்த சிறுவன் எழுந்து நிற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த ஆசிரியர் அந்த சிறுவனை கண்மூடித்தனமாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. சிறுவன் என்றும் பாராமல் ஆசிரியர் கடுமையாக தண்டித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.