ராய்ப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது
சத்திஷ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியை அவரது ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போலீசார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
25 வயதான அந்த ஆசிரியர் அங்குள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தங்கைக்கு அரபு மொழி கற்பிக்க அவர்களது வீட்டிற்கு சென்று டியூஷன் எடுத்துள்ளார் அந்த ஆசிரியர். கடந்த சனிக்கிழமை முதல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவர் அரபு சொல்லி கொடுத்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறுமியை அவரது வீட்டிலேயே பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் அந்த ஆசிரியர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பின்னர் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை விவரித்தார், அதைத் தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 (கற்பழிப்பு) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.