இந்தியா
மும்பையை துவம்சம் செய்த டவ்-தே புயல்: புகைப்பட தொகுப்பு
மும்பையை துவம்சம் செய்த டவ்-தே புயல்: புகைப்பட தொகுப்பு
அரபிக் கடலில் அதிதீவிர புயலாக இந்தியாவின் மேற்கு கடற்கரையோர பூமியை கடந்து கொண்டிருக்கிறது டவ்-தே புயல். மும்பை மாநகரை மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த புயல் கடந்த போது அதிகளவு மழை பொழிவும் பதிவாகி இருந்தது. இதனால் மும்பை நகரமே புயலில் துவம்சம் ஆகியுள்ளது.
சீற்றத்துடன் காணப்படும் மும்பை கடற்கரை!
வீதிகளில் வழிந்தோடும் மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்!
ஆங்காங்கே விழுந்துள்ள மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மழை நீரில் மல்லுக்கட்டி நடந்து செல்லும் முதியவர்!
தாழ்வான பகுதியல் தேங்கியுள்ள நீரில் நடந்து செல்லும் மக்கள்!
படகை பாதுகாக்கும் மீன்பிடி தொழிலாளர்கள்!