\
கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம்-டாடா ஸ்டீல் அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம்-டாடா ஸ்டீல் அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம்-டாடா ஸ்டீல் அறிவிப்பு
Published on

தங்களது நிறுவன ஊழியர் யாரேனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை முழுச் சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாடா ஸ்டீல் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.  மேலும் ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படுவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.

மேலும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்கள ஊழியர் யாரேனும் கொரோனா மூலம் உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com