\
ஏர் இந்தியாவை வாங்கியது டாடா சன்ஸ்?

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா சன்ஸ்?

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா சன்ஸ்?
Published on: 

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏலத் தொகையை அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் விலைக்கு வாங்கியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 10 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு கூறியிருந்தது. அதேபோல அதிகளவிலான கடனிலும் மூழ்கியிருந்த காரணத்தால் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியில் அரசு இறங்கியது. 60000 கோடி ரூபாய் கடனில் சிக்கியிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது.

ஏர் இந்தியாவின் மொத்த அதிகாரத்தையும் தனியாருக்குக் கொடுக்கவும், கடன் நிலுவையில் பெரும் பகுதி அரசு ஏற்றுக்கொள்ள முடிவு செய்து ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ் குழுமம் முன்வந்தது. இந்த ஏலத்திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com