ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்
Published on

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி,ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது.

68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகிறது. ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ.70,000 கோடி நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் தொடங்கிய நிலையில், மீண்டும் அது அந்நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது குறிப்பிடதக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com