“தேசிய நெடுஞ்சாலை NH-334-B பணிகளை முன்கூட்டியே முடிக்க இலக்கு” -அமைச்சர் நிதின் கட்கரி

“தேசிய நெடுஞ்சாலை NH-334-B பணிகளை முன்கூட்டியே முடிக்க இலக்கு” -அமைச்சர் நிதின் கட்கரி
“தேசிய நெடுஞ்சாலை NH-334-B பணிகளை முன்கூட்டியே முடிக்க இலக்கு” -அமைச்சர் நிதின் கட்கரி

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், NH-334-B 93% பணிகளுடன் நிறைவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 3 மாதங்களுக்கு முன்பே 2022 ஜனவரியில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

உ.பி/அரியானா எல்லையில் (பாக்பத்) தொடங்கும் NH-334-B சாலை, ரோகனில் முடிவடைகிறது. டெல்லியின் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் ஹரியானா வழியாக உத்தரப் பிரதேசம் முதல் ராஜஸ்தான் வரை இணைக்கிறது இந்த சாலை. இது பல சாலைகளை இணைக்கிறது. சண்டிகர், தில்லி பயணிகளுக்கும் இது நேரடி இணைப்பை வழங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source : PIB

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com