\
குஜராத்தை முந்திய தமிழக கிராம பஞ்சாயத்து 

குஜராத்தை முந்திய தமிழக கிராம பஞ்சாயத்து 

குஜராத்தை முந்திய தமிழக கிராம பஞ்சாயத்து 
Published on

மத்திய அரசு செயல்படுத்தி வரும் மிஷன் அந்தியோதயா என்ற திட்டத்தின் கீழ் வருடா வருடம் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளின் தரவரிசை வெளியிடப்படுவது வாடிக்கை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் தரவரிசை பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் மொழுகம்பூண்டி கிராம பஞ்சாயத்து முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடம் குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள பம்பானியா கிராம பஞ்சாயத்துக்கு கிடைத்துள்ளது. 

மத்திய அரசின் திட்டங்கள், நிதி செலவிடுதல், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த  தரவரிசை பிரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் 50 இடங்களில் போட்டி போட்டு இடம் பிடித்த ஆந்திர மாநிலம் இம்முறை முதல் வரிசையை தவற விட்டுள்ளது. குஜராத்தின் சில பஞ்சாயத்துகளும் இதில் இடம் பெறவில்லை

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com