மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம்முகநூல்
இந்தியா
’மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம்’ முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா?
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் மனிதக் கழிவுகளை அள்ளியதில் பலர் உயிரிழப்பு
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறையில் அதிகம் பேர் இறந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.
மத்திய சமூக நீதித் துறையின் புள்ளிவிவரங்களின்படி 2019 முதல் 2024 வரையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
63 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் 51 உயிரிழப்புகளுடன் ஹரியானா மூன்றாவது இடத்திலும் உள்ளன. தலா 49 உயிரிழப்புகளுடன் குஜராத்தும் உத்தர பிரதேசமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.