முல்லைப் பெரியாறு நீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு

முல்லைப் பெரியாறு நீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு
முல்லைப் பெரியாறு நீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பங்கீடு தொடர்பாக 1886-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீரியல் ரீதியாகவும், நில அதிர்வுகளை தாங்கும் வகையிலும், முல்லைப் பெரியாறு அணையின் கட்டுமானம் வலுவாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில், கார் பார்க்கிங் அமைக்கும் கேரள அரசின் முடிவு குறித்தும், பராமரிப்பு பணிகளை, தமிழக அதிகாரிகள் மேற்கொள்ள தடையாக இருக்கும் கேரளாவின் நடவடிக்கைகள் பற்றியும் கருத்தும் கூறாமல் இருப்பதிலிருந்து, இந்த மனு உள்நோக்கம் கொண்டது என்பதை புரிந்துகொள்ள முடிவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1886-ம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும், திருவிதாங்கூர் சமஸ்தான மன்னருக்கும் இடையே முல்லைப்பெரியாறு அணையின் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றம் 2014-ல் வழங்கிய இறுதித் தீர்ப்பில் அந்த ஒப்பந்தம் தொடர்ந்து செல்லுபடி ஆகக்கூடியது என்று தெரிவித்திருந்தது. ஆனால், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு பின்னர் பாதுகாப்பு அம்சங்களை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று தெரிவித்தும், பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றாததால் 1886ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி, கொச்சியை சேர்ந்த சுரக்‌ஷா என்ற அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com