விரைவுச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பு | செயலி மூலம் மோசடி | இந்தியா - இலங்கை தொடர்

விரைவுச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பு | செயலி மூலம் மோசடி | இந்தியா - இலங்கை தொடர்
விரைவுச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பு | செயலி மூலம் மோசடி | இந்தியா - இலங்கை தொடர்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், மதுபான கூடங்கள் திறப்பதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி: பிற மாநிலங்களுடனான தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடைகள் 9 மணி வரை செயல்படலாம்: உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு. திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீடிக்கிறது.

குடியரசுத் தலைவர்- ஆளுநர் சந்திப்பு: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார். இன்று மாலை பிரதமர் மோடியையும் சந்தித்து பேசுகிறார்.

மேட்டூர் - பாசனத்துக்கான நீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 36.97 டிஎம்சி ஆக குறைந்ததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு: இந்தியாவில் தொடர்ந்து கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான இறப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்: 8 நாட்களுக்குப்பின் கோவையில் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டது. தட்டுப்பாடு காரணமாக சென்னையில் 2ஆவது நாளாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதலுக்காக 20 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கடலூரில் மழையில் நனைந்து நெல் மணிகள் வீணாகி வருகின்றன.

ரேசன் கடைகளில் புகார் பதிவேடு: அனைத்து ரேசன் கடைகளிலும் புகார் பதிவேடு பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இணைய வழியில் புகார் தெரிவிப்பதில் சிரமங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

செயலி மூலம் நூதன மோசடி - 3 பேர் கைது: சென்னையில் செல்போன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்குவதாக கூறி நூதன மோசடி செய்த 3 பேரைக் கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

விதிகளை மீறிய விசைப்படகு பறிமுதல்: கடலூரில் விதிகளை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு கடலில் ரோந்து சென்ற மீன்வளத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசுப் பேருந்துகள் ஆயுட்காலம் அதிகரிப்பு: அரசு விரைவுப் பேருந்துகளின் ஆயுட்காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியாகியுள்ளது.

எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துக: தமிழகத்தை ஒட்டிய கேரள கிராமத்தில் ஜிகா வைரஸ் தொற்று 15 பேருக்கு உறுதியானதை அடுத்து தமிழக எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுடுமண் தண்ணீர் தொட்டி கண்டெடுப்பு: கீழடியில் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரப்படுத்தியதில், சுடுமண்ணால் ஆன தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை தொடர் தாமதம்: இந்தியா, இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் தொடங்குவதில் தாமத ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி Vs நெய்மர்: கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினா பிரேசில் அணிகள் மோதல். பெருவை வீழ்த்தி மூன்றாவது இடம் பிடித்தது கொலம்பியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com