விரைவுச் செய்திகள்: ஒரே நாடு, ஒரே ரேஷன் | 3ஆம் அலை - ரூ.100 கோடி ஒதுக்கீடு

விரைவுச் செய்திகள்: ஒரே நாடு, ஒரே ரேஷன் | 3ஆம் அலை - ரூ.100 கோடி ஒதுக்கீடு
விரைவுச் செய்திகள்: ஒரே நாடு, ஒரே ரேஷன் | 3ஆம் அலை - ரூ.100 கோடி ஒதுக்கீடு

ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு - உச்ச நீதிமன்றம் உத்தரவு: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஜூலை 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவர் சேர்க்கை - பதிலளிக்க உத்தரவு: +2 இம்ப்ரூவ்மெண்ட் தேர்வுக்குப் பிறகே கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பல்கலைக்கழக மானியக்குழு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நில ஆர்ஜித வழக்கு - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி: தமிழ்நாடு அரசின் 2019 ஆம் ஆண்டு நில ஆர்ஜித சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டதில், விவசாயிகள் 55 பேர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

5, 6வது அணு உலைகளுக்கு இன்று கட்டுமானம்: கூடங்குளத்தில் 5 மற்றும் 6ஆவது அணு உலைகளுக்கான கட்டுமானப்பணிகள் இன்று தொடங்கப்படுகிறது. இதன்மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3ஆம் அலையை தடுக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலையை தடுப்பதற்கான ஏற்பாடுகளுக்கு100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீட் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்: நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது.

அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு - மா.சு: நீட் தேர்வு பற்றிய ஆய்வுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது என்றும், தமிழக அரசின் நிலைப்பாடு பிரமாண பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

ஒன்றிய ஆட்சிப் பரப்பு எது? - விளக்கம்: ஒன்றிய ஆட்சிப் பரப்பு என்பது புதுச்சேரியையே குறிக்கும் என அமைச்சரவை பதவியேற்பில் இடம்பெற்ற வாசகம் குறித்து துணைநிலை ஆளுநர் அலுவலகம் விளக்கமளித்திருக்கிறது.

சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

சொகுசு அறையில் சிவசங்கர் பாபாவிடம் விசாரணை: பாலியல் தொல்லை வழக்கில் சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து சென்று சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை சொகுசு அறையில் வைத்து சிபிசிஐடி போலீசார் சரமாரி கேள்வி எழுப்பிவருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்: கடலூர் அருகே குடியிருப்பு பகுதியை ஒட்டி குவியல் குவியலாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்தடை இனி இருக்காது - செந்தில் பாலாஜி: தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். மின்வாரிய பராமரிப்பு பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதியவர்களை ஏமாற்றி ரூ.9 லட்சம் திருட்டு: புதுச்சேரியில் முதியவர்களை ஏமாற்றி 9 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. வங்கிக் கணக்கு விவரங்களை தொலைபேசி மூலம் பெற்று இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வரைபடம் நீக்கம்: காஷ்மீர், லடாக்கை தனி நாடு போல் ட்விட்டர் நிறுவனம் சித்தரித்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பையடுத்து சர்ச்சைக்குரிய வரைபடம் நீக்கப்பட்டது.

40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா: இந்தியாவில் 102 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 37,566 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com