விரைவுச் செய்திகள்: இந்தியா - இலங்கை தொடர் தாமதம் | எது திராவிட மாடல்? - முதல்வர் உரை

விரைவுச் செய்திகள்: இந்தியா - இலங்கை தொடர் தாமதம் | எது திராவிட மாடல்? - முதல்வர் உரை
விரைவுச் செய்திகள்: இந்தியா - இலங்கை தொடர் தாமதம் | எது திராவிட மாடல்? - முதல்வர் உரை

பிரதமரை இன்று சந்திக்கிறார் ஆளுநர் புரோகித்:

பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சந்திக்கிறார். ஏழு பேர் விடுதலை, நீட் விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ‌பரவலாக மழை பெய்துவருகிறது. இன்று முதல் 4 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

திராவிட மாடல் - முதலமைச்சர் விளக்கம்:

அனைத்து சமூகங்கள், மாவட்டங்கள், பிரிவினரை உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராவிட மாடல் என பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் போராட்டம் - அதிமுக:

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு உடனே நிறைவேற்றாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் - நீதிமன்றம் அறிவுறுத்தல்:

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

2 நாட்களில் 15.85 லட்சம் தடுப்பூசிகள்:

தமிழகத்துக்கு 2 நாட்களில் 15.85 லட்சம் தடுப்பூசி தருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக டெல்லியில் தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

அரசுப் பேருந்துகள் ஆயுட்காலம் அதிகரிப்பு:

அரசு விரைவுப் பேருந்துகளின் ஆயுட்காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியாகியுள்ளது.

தண்ணீர் இல்லை - விவசாயிகள் கண்ணீர்:

கல்லணை கால்வாயில் குறைந்த அளவே நீர் திறக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கர்நாடாகாவிலிருந்து காவிரி நீரை கேட்டுப்பெற வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.

கஞ்சா விற்ற வழக்கறிஞர்கள் கைது:

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கறிஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பட்டாக்கத்தியை சுழற்றி வீடியோ - இருவர் கைது:

சென்னையில் பட்டாக்கத்தியை சுழற்றி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியீட்ட17 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காயத்துடன் அவதிப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு:

முதுமலையில் உடலில் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த ஆண் காட்டு யானை உயிரிழந்தது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்த நிலையில் உயிர் பிரிந்தது.

இந்தியா - இலங்கை தொடர் தாமதம்:

இந்தியா, இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் தொடங்குவதில் தாமத ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com