விரைவுச் செய்திகள்: வழிபாட்டுத் தலங்கள் திறப்பு | கனமழை வாய்ப்பு | வெளிநாடு வேலையிழப்பு

விரைவுச் செய்திகள்: வழிபாட்டுத் தலங்கள் திறப்பு | கனமழை வாய்ப்பு | வெளிநாடு வேலையிழப்பு
விரைவுச் செய்திகள்: வழிபாட்டுத் தலங்கள் திறப்பு | கனமழை வாய்ப்பு | வெளிநாடு வேலையிழப்பு

வழிபாட்டுத் தலங்கள் திறப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி: தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில் வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. பக்தர்கள் உற்சாகமாக வழிபாடு செய்கின்றனர்.

50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி: தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. .

மீன்பிடிப்பதில் மோதல் - 19 பேர் கைது: பெரம்பலூர் அருகே மீன்பிடிப்பதில் மீனவர்கள் - பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் இரு தரப்பைச் சேர்ந்த 19 பேரை காவல்துறை கைது செய்தது.

மீண்டும் ஊருக்குள் உலா வரும் 'பாகுபலி': மேட்டுப்பாளையத்தில் வனத்துறைக்கு போக்கு காட்டிய பாகுபலி யானை மீண்டும் ஊருக்குள் வரத் தொடங்கியது. பாகுபலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் - இலங்கை நபர் கைது: போதைப் பொருள் கடத்தலில் சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய இலங்கை நபர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து வந்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை.

மேகதாது - துரைமுருகன் டெல்லி பயணம்: மேகதாது உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகள் குறித்து பேச தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார். மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத்தை நாளை சந்திக்கிறார்.

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: கடலூரில் பெய்த மழையால் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. ஈரப்பதம் 17 சதவிகிதமாக இருப்பதாகக் கூறுவதால் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் வேலையிழந்த 10 லட்சம் பேர்: கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் வேலை இழந்த 10 லட்சம் பேர் இந்தியா திரும்பினர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டும் சுமார் 9 லட்சம் பேர் கேரளா திரும்பினர்.

பசுவின் பெயரால் தாக்குவது இந்துத்துவா அல்ல: பசுக்காவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துவது இந்துத்வாவுக்கு எதிரானது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்திருக்கிறார். முஸ்லீம்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்களே இல்லை என்றும் பேசியுள்ளார்.

முற்றிலும் இடிக்கப்பட்ட கட்டடம்: அமெரிக்காவில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. புயல் அச்சுறுத்தல் காரணமாக நவீன முறையில் தரைமட்டமாக்கப்பட்டது.

விமான விபத்தில் உயிரிழப்பு 50ஆக உயர்வு: பிலிப்பைன்ஸில் ராணுவ வீரர்கள் சென்ற விமானம் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கிய விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்திருக்கிறது. 49 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முகக்கவசம் அணிவது தனிநபர் விருப்பம்: இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது தனிநபர் விருப்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவது பற்றி வரும் 19ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com