புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் தமிழிசை சவுந்தரராஜன்.
புதுச்சேரி அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இடையே மோதல்போக்கு நிலவி வந்த நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழிசை சவுந்தரராஜன். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சித் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார்.
முன்னதாக, புதுச்சேரியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு காரில் வந்திறங்கிய அவரை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கு ஏற்கெனவே காத்திருந்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் வரவேற்றனர். முன்னதாக. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கிரண்பேடியை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தி வழியனுப்பினர்.