“ஆளுநர் அதிகாரம் தொடர்பான தீர்ப்பு, அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது” - தமிழிசை

“டெல்லி அரசு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்PT

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

செய்தியாளர்களிடம் இன்று பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “ஜிப்மர் மருத்துவமனையில் உயர் மருத்துவ பரிசோதனைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இன்னும் கட்டணம் வாங்கப்படவே இல்லை. ஆனால் சில கட்சிகள் இல்லாத போருக்கு போய் இல்லாத வெற்றியை கண்டதாக சொல்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை” என்றார்.

Governor Tamilisai
Governor Tamilisaipt desk

அப்போது அவரிடம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுத்தான் அதிகாரம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது டெல்லி அரசுக்கு வழிமுறை சொல்லியிருக்கிறார்கள். தலைநகர் என்பதால் அதற்கென்று கருத்து உள்ளது. ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் வெவ்வேறுதான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாமே மக்களுக்கானதுதான். நீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.

டெல்லி யூனியன் பிரதேசத்துக்கான தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் தானே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இத்தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது. ஆளுநர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை. அன்பால்தான் ஆள்கிறோம்" என்று தெரிவித்தார்.

supreme court
supreme courtpt desk

மேலும் இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் இன்று கேட்டதற்கு, “மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது. இதைதான் நாங்கள் வலியுறுத்தி வந்தோம்” என்றார். மேலும் இத்தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்துமா என்றதற்கு, “தீர்ப்பை படித்து பார்த்தால்தான் முழுமையாக தெரியும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com