தமிழ்த்தாயின் பிள்ளைகள் என அழைத்தார் மோடி

தமிழ்த்தாயின் பிள்ளைகள் என அழைத்தார் மோடி
தமிழ்த்தாயின் பிள்ளைகள் என அழைத்தார் மோடி

இலங்கைத் தமிழர்கள் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்று அழைத்தார் மோடி. உலகின் மிகவும் பழமையான தமிழ் மொழியை அவர்கள் பேசுவது பெருமையானது என்றும் கூறினார்.

இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள நுவெரலியாவில் மலையகத் தமிழர்கள் மத்தியில் இன்று பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழறிஞர் கணியன் பூங்குன்றனார், ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார். அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தைப் நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள்.

நீங்கள் அனைவரும் தமிழ்த் தாயின் பிள்ளைகள். உலகில், வாழும் மொழிகளில் மிகவும் பழமையான பாரம்பரியமும் கொண்ட செம்மொழியான தமிழ் மொழியை பேசுகிறீர்கள். அதோடு சிங்களத்தையும் பேசுகிறீர்கள் என்பது பெருமைக்குரியாதாகும். மொழி என்பது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் கருவி மட்டுமல்ல, அது கலாசாரத்தை வரையறுக்கிறது. சமூகங்களை சேர்க்கிறது. ஒரு சமூகத்தின் வேறுபாடுகள் கொண்டாட்டங்களுக்கு வழிகோல வேண்டுமே தவிர, முரண்பாடுகளுக்கு வித்திடக்கூடாது’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com