தேசிய துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்று: தமிழக வீரர் அசத்தல்
தேசிய துப்பாக்கிச் சுடுதல் டிரையலில், தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் அசத்தியுள்ளார்.
நேஷனல் ரைபிள் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஒருங்கிணைத்த இந்த டிரையலில் நாடு முழுவதும் இருந்து முன்னணி துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் பங்கேற்றனர். ஜனவரி 5 முதல் 16 வரை இந்த போட்டிகள் நடைபெற்றன. ரைபிள், பிஸ்டல் மற்றும் ஷாட் கன் என வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதில் சிறப்பாக செயல்படுபவர்கள் இந்த ஆண்டில் ISSF (சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு) நடத்தும் முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும் பங்கேற்கும் இந்திய அணியில் பங்கு பெறுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
CLAY PIGEON TRAP MEN T2 பிரிவில் மொத்தம் 40 பேர் பங்கேற்றனர். முதலில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 118 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தார் பிருத்விராஜ். தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் 40 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்து தமிழகத்தை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் அசத்தினார்.