மின்சார வாகனங்களின் பயன்பாடு
மின்சார வாகனங்களின் பயன்பாடுமுகநூல்

மின்சார வாகனங்களின் பயன்பாடு... தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

இதுகுறித்த தகவல் மத்திய அரசின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
Published on

இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது. மத்திய அரசின் வாஹன் இணையதளத்தில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 2024-25ஆம் நிதியாண்டில் நாட்டில் 11 லட்சத்து 67 ஆயிரத்து 720 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வாஹன் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில் அதிகபட்சமாக, உத்தர பிரதேச மாநிலத்தில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 833 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மின்சார வாகனங்களின் பயன்பாடு
மகாராஷ்டிரா | 1 - 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்.. கிளம்பிய எதிர்ப்பால் பின்வாங்கிய ஃபட்னாவிஸ் அரசு!

அடுத்ததாக, மஹாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 801 மின் வாகனங்களும், கர்நாடகாவில் 88 ஆயிரத்து 60 மின்சார வாகனங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 76 ஆயிரத்து 359 மின்சார வாகனங்களும், அசாமில் 59 ஆயிரத்து 358 மின்சார வாகனங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வாஹன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com