தமிழ்நாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக்
தமிழ்நாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக்pt web

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள்.. தமிழகத்திற்கு 11 ஆவது இடம்

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 11ஆவது இடத்தில் இருக்கிறது. மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

நாட்டின் திட்டமிடலுக்காக செயல்பட்டு வரும் அமைப்பான நிதி ஆயோக் மாநிலங்களின் நிதிநிலை குறித்த விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கை அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டுக்கான இந்த அறிக்கை செலவினங்கள் பயனுள்ளதாக இருந்ததா, வருவாய் திரட்டும் நடைமுறைகள், அரசு தன் நிதி நிலையை சீராக பராமரிப்பதில் கவனம் செலுத்தியதா, கடன் வாங்குவது கட்டுக்குள் இருந்ததா என்பன உள்ளிட்ட அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

நிதி ஆயோக் கூட்டம்
நிதி ஆயோக் கூட்டம்முகநூல்

பல்வேறு கணக்கீடுகள் படி

  • ஒடிசா மாநிலம் 67.8 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது.

  • சத்தீஸ்கர் 55.2 மதிப்பெண்களுடன் 2ஆம் இடத்திலும்

  • கோவா 53.6 மதிப்பெண்களுடன் 3ஆம் இடத்திலும் உள்ளன.

  • ஜார்க்கண்ட் 51.6 மதிப்பெண்களுடன் 4ஆம் இடத்திலும்

  • குஜராத் 50.5 மதிப்பெண்களுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன.

  • மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகியவை 6 முதல் 10 இடங்களில் உள்ளன.

  • தமிழ்நாடு 29.2 மதிப்பெண்களுடன் 11ஆவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான், பீகார், ஹரியானா, கேரளா ஆகிய மாநிலங்கள் 12 முதல் 15 இடங்களில் இருக்கின்றன. மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப் ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளன. 18 மாநிலங்கள் கொண்ட இப்பட்டியலில் மாநிலங்கள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகம் 3ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்பட்டியல்படி மேற்கு வங்காளம், பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது தெரியவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com