"தமிழ்நாடு,கேரளா கட்சிகள் சிஏஏ குறித்து வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்துங்கள்!" - ரவிசங்கர் பிரசாத்

இந்தச் சட்டம் எந்த இந்தியர்களின் குடியுரிமையையும் பறிக்கவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கிறது - ரவிசங்கர் பிரசாத்
ரவிசங்கர் பிரசாத்
ரவிசங்கர் பிரசாத்PT

தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த கட்சிகள் சிஏஏ குறித்து வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்துங்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து குற்றம் சாட்டியிருந்தார்.

ரவிசங்கர் பிரசாத்
சிட்டிசன் திரைப்படைத்தை போன்ற அதிர்ச்சி சம்பவம்; தோண்ட தோண்ட ஆயிரக்கணக்கான எலும்புகூடுகள்!

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர பிரசாத் கூறுகையில் , “இந்தச் சட்டம் எந்த இந்தியர்களின் குடியுரிமையையும் பறிக்கவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கிறது.

வகுப்புவாத பதற்றத்தை பரப்ப முயற்சிப்பவர்கள் ,குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த கட்சிகள் வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் எதிர்ப்புக்கு பதிலளித்த ரவிசங்கர் பிரசாத், “மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசியல் களம் வழுக்குவதால், அதற்கு வகுப்புவாத சாயம் பூசும்படி அவரை வற்புறுத்துகிறது. பாஜக அதை வன்மையாகக் கண்டிக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக எந்த அளவிற்கு சீரழிக்க தயாராக இருக்கிறார் மம்தா பானர்ஜி ?” என்று விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com