\
நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம்!

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம்!

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம்!
Published on

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு ஓய்வூதியம் (Pension) வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆத்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். “ஓர் ஓய்வூதிய (Pension) விவகாரத்தில் நீதிமன்றம் வரை விவகாரம் வந்து அது நிறைவடைந்து விட்ட போதிலும் மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என அரசு வாதிடுகிறது. இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல” எனக் கூறி 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளபடி செய்து உத்தரவிட்டனர். 4 வாரத்தில் அபராத தொகையை உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com